நன்கொடை
Europe/Copenhagen
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான விசேட கல்வித்திட்டக் கொடுப்பனவு.
கல்லூரியின் உயர்தரமாணவர்களின் (2026) பெறுபேற்றை மேம்படுத்தும் நோக்கில் எம்மால் வழங்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய ரூபா 200,000.00 இனை அருணோதயம் அமைப்பு பழையமாணவர் சங்கத்திற்கு வழங்கிவைத்தது.
கல்லூரி அதிபர் மற்றும் பிரதிஅதிபர் இந்த திட்டத்திற்கான முயற்சிகளைச் செய்திருந்தனர்.
அருணேதயம் அமைப்பு தொடர்ச்சியாக எமது கல்லூரிக்கும் மாவட்டத்தின் பல நலன்புரிவிடயங்களுக்கும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 16.10.2025 அன்று குறித்த தொகையினை அருணேதயத்தின் நிருவாகிகளான திரு.க.பத்மநாதன், பொறியியலாளர் சதீஸ், திரு.ஜி.சுரேஸ் ஆகியோர் கல்லூரிக்கு வருகை தந்து வழங்கியிருந்தனர்.
தன்னார்வமாக உதவிய அமைப்பிற்கும் அதன் நிருவாகிகளுக்கும் பழையமாணவர் சங்கத்தின் மனமார்ந்த நன்றி.