Skip to Content

அடுத்த தலைமுறையினை அரவணைத்துத் தயார்படுத்தும் ஒரு அற்புதமான சந்திப்பு.


2018 உயர்தர  மாணவர்களுடன் நீண்ட நேர ஆரோக்கியமான உரையாடல்.

பழையமாணவர்கள் மத்தியில் வலிமையான பிணைப்பபை ஏற்படுத்துவதன் மூலம் எமது கல்லூரியை வளப்படுத்தும் முயற்சியின் இரண்டாவது பழையமாணவர் குழுவுடன் இன்று 12.04.2026 மாலை பழையமாணவர் சங்க அலுவலகத்தில் சந்திப்பு நடந்தேறியது.

சங்கத்தின் கட்டமைப்பு, செயற்பாடுகள், தேவைகள், எதிர்காலத்திட்டங்கள் கல்லூரியின் வளர்ச்சியில் எமது வகிபாகம் என பலவிடயங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

தம்பிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பொருளார் தேவையான விளக்கத்தையும் வழங்கினார்.

எம்மிலும் 26 வருடங்கள் இளைய மாணவர்களான இவர்கள் தமது எதிர்பார்ப்பு, சந்தேகங்களைக் கேட்டதுடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முன்னெடுக்கவேண்டிய திட்டங்களையும் முன்வைத்தனர்.

150 நிமிடம் கடந்தும் கலந்துரையாடல் ஆர்வத்துடன் நீடித்தது. 

குறுகிய காலத்திற்குள் இந்த வகுப்பினருடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்த தம்பி ரிசிக்கு எனது மனமார்ந்த நன்றி.

சிதறிக் கிடக்கும் எமது வளங்களைத் திரட்டி பெரும் பணி ஆற்றுவோம்.

கலந்துகொண்ட அனைவருக்கும் பழையமாணவர் சங்கம் சார்பாக எனது நன்றி.