OBA Membership Application
Starts
Europe/Copenhagen
Ends
Europe/Copenhagen
Join us through this 24/7 online membership registration.
We kindly invite our alumni community to update their details by completing the registration form at the link below.
OBA Membership Registration Application https://hinduobacontactformapp.vercel.app
🌟 அங்கத்தவர் பதிவுக்கான அழைப்பு! 🌟
தி.இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம்.
அன்பான பழையமாணவர்களே!
அனைவரும் அங்கத்தவர் பதிவுக்கான Application Form-இல் தங்களது விவரங்களைப் புதுப்பிக்கவும் / பதிவு செய்யவும் எனத் தயவுடன் வேண்டுகிறோம்.
📌 யார் பதிவு செய்ய வேண்டும்?
✅ ஏற்கனவே வாழ்நாள் அங்கத்தவர்களாக உள்ளவர்கள்
✅ புதியதாக அங்கத்துவம் பெற விரும்பும் பழையமாணவர்கள்
📍 ஏன் மீண்டும் பதிவு அவசியம்?
🏠 முகவரி, 📞 தொலைபேசி, 📧 மின்னஞ்சல் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதால் தொடர்புகொள்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
🎓 பழயை மாணவர்களின் உயர் கல்வித் தகைமை, சாதனைகள், பணித்துறை ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.
🌍 வெளிநாடுகளில் வாழும் பழையமாணவர்களின் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும்.
புதிதாக அங்கத்துவம் பெறவுள்ளவர்களுக்கானது.
💰 வாழ்நாள் அங்கத்துவக் கட்டணம்: ரூ.1000/-
🏦 வங்கி: இலங்கை வங்கி – திருக்கோணமலை கிளை
💳 கணக்கு பெயர்: தி.இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம்
📒 கணக்கு இலக்கம்: 2367355
🔗 பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்:
👉 Application Form https://hinduobacontactformapp.vercel.app
🧾 அனைத்து தகவல்களும் பழையமாணவர் சங்க நிர்வாக நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும்.
🙏 இந்தப் படிவத்தை அதிகம் பகிர்ந்து, அனைத்து பழையமாணவர்களும் அங்கத்தவராக இணைய உதவுங்கள்.
அங்கத்தவர் பதிவுக்கான விண்ணப்பப் படிவம். (Application Form)
ஏற்கனவே அங்கத்துவக் கட்டணம் செலுத்தி வாழ்நாள் அங்கத்தவர்களாக உள்ளவர்கள் மற்றும் புதிதாக அங்கத்துவம் பெறவிரும்பும் பழையமாணவர்களும் இதில் பதிவுசெய்தல் வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தைக் பூரணப்படுத்தி பதிவு செய்தவர்கள் ஏன் மீண்டும் இதில் விபரத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்?
1. அங்கத்துவம் கொண்ட பழைய மாணவர்களில் பெரும்பான்மையானவர்களின் வதிவிடமுகவரி மாற்றமடைந்துள்ளது. இதனால் பழையமாணவர்களைத் தொடர்புகொள்வதில் பெரும் இடர்பாடு காணப்படுகின்றது.
2. தொலைபேசி இலக்கம், மின்அஞ்சல் முகவரி என்பனவும் மாற்றமடைந்துள்ளது. இதுவும் தொடர்பாடலில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
3. கல்வித் தகைமை, பழையமாணவர்கள் அடைந்துள்ள உயர் பட்டங்கள், சாதனைகள் தொடர்பான தகவல்கள் சங்கத்திடம் இல்லை. அத்துடன் அவர்களின் துறைசார் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளமுடியவில்லை.
4. மேற்படி விடயங்களைப் புதுப்பித்தலுக்காக இந்த விண்ணப்பத்தைப் பூரணப்படுத்த வேண்டியுள்ளது.
5. அங்கத்துவப் படிவத்தில் முன்னர் கேட்டுப்பெற்ற தகவல்களைவிட மேலதிக பல அவசியமான விடயங்கள் நிருவாகத்திற்குத் தேவையாக உள்ளதால் அவற்றையும் பெறவேண்டியுள்ளதால் இந்த விண்ணப்பம் அனைவரும் பூரணப்படுத்தவேண்டிய நிலைகாணப்படுகின்றது.
6. எமது பழையமாணவர்களின் பெருமை, அவர்கள் பரந்த விரிந்துள்ள துறை, அவர்களது சாதனைகள், பரவிவாழும் நாடுகள், அவர்கள் பெற்றுள்ள விசேட தகைமைகள், அவ்வாறானவர்களை கல்லூரி கௌரவித்தல் எனப் பல விடயங்களுக்கும் மற்றும் ஆய்வுகளுக்கும் இத்தகவல்கள் தேவையானதாக உள்ளது.
7. மேற்படி விடயங்கள் அனைத்தும் தொடர்ந்தும் மாறும் தகவல் என்பதால் அங்கத்தவர்கள் சுயமாக தமது தகவல்களை திருத்திக்கொள்ளும், புதுப்பிக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு உறுப்பினர்களின் மின்னஞ்சல் அத்தியாவசியமானதாகும். அது தொடர்பாக பின்னர் விரிவாக அறியத்தரப்படும்.
8. இங்கு பதிவுசெய்யும் தகவல்கள் அனைத்தும் பழையமாணவர் சங்கநிருவாக நடவடிக்ககைளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
9. அங்கத்தவப் பதிவு இலக்கம் மறந்தவர்களுக்கு உதவும்பொருட்டு அவர்களின் இலக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
10. விண்ணப்பத்தைப் பூரணப்படுத்த இடர்பாடுள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள காணொளியைப் பார்வையிடவும்.
புதிதாக பதிவுசெய்யும் பழையமாணவர்களுக்கானது.
1. விண்ணப்பத்தில் உள்ள அனைத்துத் தரவுகளையும் தயவுசெய்து பூர்த்தி செய்யவும்.
2. உங்களது விண்ணப்பங்கள் நிருவாகசபையினால் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அங்கத்தவக் கட்டணம் செலுத்துமாறு கோரும்போது கட்டணத்தைச் செலுத்தி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
3. வாழ்நாள் அங்கத்துவக் கட்டணம் ரூபா 1000.00 ஆகும். செலுத்தவேண்டியவ வங்கி மற்றும் கணக்கிலக்கம்: இலங்கை வங்கி: திருக்கோணமலை. தி. இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, பழையமாணவர் சங்கம்.கணக்கு இலக்கம்: 2367355.
பழையமாணவர் சங்கத் தரவுத்தளம் மேம்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பல விடயங்களை உள்ளடக்கிய இப்படிவத்தை தன்னார்வமாக எமது பழையமாணவர்கள் திரு.தர்மேந்திரா மற்றும் திரு கௌரிசங்கர் அவர்கள் வடிவமைத்துத் கொடுத்துள்ளார்கள் (2001 வகுப்பு) அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்தப்படிவத்தை அதிகம் பகிருங்கள், அனைத்துப் பழையமாணவரும் அங்கத்தவராக இணையவேண்டும் என்பது எமது பேரவா எனவே அனைத்துப் பழையமாணவர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
க.துஷ்யந்தன்,
செயலாளர்.