Meeting for Cricket Subcommittee
Europe/Copenhagen
விளையாட்டு மற்றும் அனைத்துத் துணைப்பாடவிதானங்களுக்கான உபகுழுக்களை உருவாக்குதல்.
தி/இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக்கல்லூரி திருக்கோணமலை.
பழையமாணவர் சங்கம்.
செயற்திட்டங்கள் – 2025 & 2026.
திட்டத்தின் பெயர்: விளையாட்டு மற்றும் அனைத்துத் துணைப்பாடவிதானங்களுக்கான உபகுழுக்களை உருவாக்குதல்.
திட்ட இலக்கம்: OBA/2025 & 2026/10
நிருவாகசபையில் அனுமதிவழங்கப்பட்ட திகதி: 03/09/2025
திட்டத்தை முன்மொழிந்தவர்: க.துஷ்யந்தன்.
திட்டம் ஆரம்பிக்கும் திகதி: 16/10/2025
கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரர்கள், விளையாட்டில் ஆர்வமுடைய பழைய மாணவர்கள் அனைவரும் மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்து பலமான உபகுழுவினை உருவாக்கி கல்லூரியின் கிரிகட் விளையாட்டினை மேம்படுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் .
கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வரவை Register மூலம் உறுதிப்படுத்தவும் உறுதிப்படுத்தவும்.
(ஏனைய விளையாட்டுகளுக்கான கூட்ட அறிவித்தல் விரைவில் அறியத்தரப்படும்)
னைத்து இணைப்பாடவிதானங்களுக்குமான உபகுழுக்களை அமைக்கும் செயற்திட்டத்தின் முதலாவது முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது.
16.10.2025 அன்று திட்டமிட்டவாறு கிரிக்கட் விளையாட்டுக்கான உபகுழுக்கூட்டம் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிபரின் தூரநோக்குச் சிந்தனைகளும், பிரதி அதிபர்களின் முழுஒத்துழைப்பும் இச்செயற்பாட்டை முன்னெடுக்க ஆதாரமாக இருந்தது.
பழையமாணவர்கள், பெற்றோர்கள், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் என அனைவருக்கும் விடுக்கப்பட் பொது அழைப்பிற்கு அமைய 39 பேர் இக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
கூட்டத்தில் முன்னாள் தொடர் செயற்பாட்டாளர்கள் தம் கருத்தினைப் பதிவு செய்திருந்தனர்.
கடந்தகாலத் வெற்pகளுக்கும் தோல்விகளுக்குமான காரணங்களை விபரித்தனர், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கருத்துளையும் முன்வைத்தனர்.
நிகழ்ச்சி நிரலுக்கு அமைய விளையாட்டுடன் நேரடித்தொடர்புள்ள துறைசார்ந்த 15 பேர் கொண்ட உபகுழு உருவாக்கப்பட்டது.
தெரிவுசெய்யப்பட்ட உபகுழு நிருவாக அமைப்பிறகு ஏற்ப பொறுப்புகளும் பதவிகளும் பகிர்ந்தளிக்கப்படும். எதிர்வரும் 22.10.2025 அன்று மாலை 7.00 மணிக்கு கூட்டத்திற்கான நாள் திட்டமிடப்பட்டது. எதிர்வரும் 30.10.2025 ஆந்திகதிக்கு முன் உபகுழுவின் எதிர்காலத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை முன்னெடு;க்க முழுமையான ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்கும் அதிபர் அவர்களுக்க நன்றி.
கூட்டத்தி;ற்கு வருகைதந்து விளையாட்டு தொடர்பாக பாடசாலை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முன்னேற்றம் பற்றி அறியத்தந்த பிரதியதிபர்கள் விiயாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிபப்hளர்களுக்கு நன்றி.
மிகுந்த ஆர்வத்துடன் கிரிக்கட்டினை yமேம்படுத்த தமது தொடர்பங்களிப்பினை வழங்கும் பழையமாணவர்கள் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பழையமாணவசங்க நிருவாகிகள் அனைவருக்கும் நன்றி.
க.துஷ்யந்தன்,
செயலாளர்,
பழையமாணவர் சங்கம்.
நன்றி.
க.துஷ்யந்தன்
செயலாளர்.