Skip to Content

கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு பழையமாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இன்றைய காலத்தில் மாணவர்கள் உளவளமேமபாட்டுத் தேவையுடையவர்களாகவே உள்ளனர்.

வயது பால் வேறுபாடின்றி கவனச்சிதறல், மனதை ஒருநிலைப்படுத்தமுடியாமை, சமூகஊடகப்பாதிப்பு, கற்றலில் நாட்டமின்மை, தனக்குப் பொருத்தமான துறையினைத் தேர்வு செய்முடியாமை என இன்னேரன்ன பிரச்சனைகளால் பாதிக்கப்படுள்ளனர் அதன் வெளிப்பாடுதான் தொடர்ச்சியாக நாம் அறியும் செய்திகளாக உள்ளது.

மாணவர்கள் மட்டுமல்ல அனைவருமே இந்தப் பிரச்சனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாவே காணப்படுகின்றோம். உளவள ஆற்றுப்படுத்தல் தேவை எங்கும் உணரப்படுகின்றது.
அந்த வகையில் எமது கல்லூரிமாணவர்களின் உளவள மேம்பாட்டுக்கான செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக 11.05.2026 அன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு  பழையமாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தலைசிறந்த வளவாளரான வைத்திய நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் ( யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை) அவர்களால் இச்செயலமர்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழையமாணவர்களும் குறித்த செயலமர்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

குறித்த செயலமர்வானது பழையமாணர் சங்க நிருவாகி திரு.இ.ஹரிகரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது.

வளவாளருக்கும் ஏற்பாட்டாளருக்கும் பழையமாணவர் சங்கதின் சார்பான நன்றி.